பஸ் கண்டக்டர் to CM.. அந்த படமே ஷங்கர்சார் சூப்பர் ஸ்டாருக்காக எழுதுனது தான்.. ஷங்கரின் உதவி இயக்குனர் பளீச்…

By Begam

Published on:

தென் இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் ஷங்கர். தற்போது இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் புதிய படம் உள்ளிட்டவற்றில் இணைந்துள்ளார். ஜெண்டில் மேன் படம் மூலம் ஹிட் இயக்குனரான இவர் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முதல்வன்.

   

இப்படத்தில் அர்ஜுனுடன் இணைந்து மோனிஷா கோரியலா, ரகுவரன், வடிவேலு, விஜயகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அரசியல் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. கே.வி.ஆனந்த் படத்தொகுப்பு செய்திருந்த இந்த படத்திற்கு, ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

நடிகர் அர்ஜுனினின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கிய திரைப்படமாகவும் அமைந்தது.  இயக்குனர் சங்கர் அரசியல் கதைகளத்துடன் இயக்கிய இந்த படத்தின் கதையை முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மனதில் வைத்து தான் எழுதினாராம். அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து சூப்பர் ஸ்டார் எப்படி  ‘பஸ் கண்டக்டர் முதல்  நிஜமான CM ஆக இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் CM ஆக மாறினாரோ’ அதை மனதில் வைத்துக் கொண்டு தான் முதல்வன் கதையை எழுதியுள்ளார்.

இக்கதையை சூப்பர் ஸ்டாரிடமும் சென்று கூறியுள்ளார். ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களால் தன்னால்   இப்படத்தில் நடிக்க முடியாது என்பதை அவரே ஷங்கரிடம் நேராக வந்து கூறினாராம்.  இதனை இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதோ அந்த பேட்டி…