தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, பில்லா, ஜிகர்தண்டா, மெட்ராஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து பில்லா ரங்கா என்ற தெலுங்கு திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்திருக்கிறார். சினிமாவில் இசையமைக்க வந்த குறுகிய காலத்தில் 20 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணனின் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஏ ஆர் ரகுமானின் ஸ்லம்டாக் மில்லினியர் படம் தான்.
பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பின்னணி இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் சமீபத்தில் விஜயின் பைரவா, தனுஷின் கொடி, வடசென்னை, சூப்பர் ஸ்டாருடன் காலா மற்றும் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படத்தில் இசையமைத்திருக்கின்றார்.
இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ஸ்டைலில் இருக்கும். இது அனைவருக்கும் பிடித்த வகையிலும் இருக்கும். இப்படி புகழுக்குரிய இவர் மீனாட்சி ஐயர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீக்ஷிதா வெங்கடேசன் என்ற மகள் இருக்கிறார். இவரும் ஒரு பிரபல பாடகி தான். ‘என்ஜாயி எஞ்சாமி’ என்ற இவரது பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து படங்கள் மற்றும் தொடர் ஹிட் பாடல்கள் என்று பிசியாக வலம் வருகிறார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை மனைவி மீனாட்சி அவரை விட ஏழு வயது மூத்தவர். தற்போது அவருக்கு 47 வயதாகின்றது. இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அழகிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…