தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அனைவராலும் கொண்டாடப்படும் இளையராஜா பாடல்கள் பலருடைய மனதிற்கு இதமாகவும் பலருடைய வழியைப் போக்கும் மருந்தாகவும் இருக்கின்றது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இளையராஜா அடிக்கடி பேசும் வார்த்தைகள் சில நேரங்களில் சர்ச்சையை கிளப்பி விடுகின்றன. அதேசமயம் அவர் செய்யும் சாதனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

திரைப்படங்களில் பிசியாக பாடல்களை எழுதி இசை அமைத்துக் கொண்டிருக்கும் இளையராஜா சில மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பல ஊர்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார். இப்படியான நிலையில் இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளியிட்டுள்ள ஒரு செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவர் அவரின் மனைவி தாலியை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். நான் அதைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்து என்னையா இது என்று கேட்டேன், சார் என் படம் ரிலீஸ் ஆகப்போகுது, என்னோட படத்துக்கு இசையமைத்த உங்களுக்கு கொடுக்க பணம் இல்லை, அதனால் இதை வச்சுக்கோங்க என்று என்கிட்ட சொன்னாரு. நான் உடனே முதலில் இங்கிருந்து கிளம்பு வெளியில போயா என்று சொல்லி திட்டி அனுப்பிட்டேன் என தயாரிப்பாளர் செய்த ஒரு சம்பவத்தை இளையராஜா பகிர்ந்துள்ளார்.
