கெத்து காட்டிய அனிருத்தை ஒரே அடியாக கவிழ்த்த ஜிவி பிரகாஷ்… கைவசம் இத்தனை திரைப்படங்கள் வச்சிருக்காறா..?

By Nanthini on மாசி 27, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இசையும் மிக முக்கிய காரணம் தான். இளையராஜா தொடங்கி அனிருத் வரை இசையில் கோலோச்சிய பிரபலங்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக 90களில் இளையராஜாவை மிஞ்ச ஆளே கிடையாது. அதன் பிறகு ஏ ஆர் ரகுமான் வந்து சுமார் 20 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் பின்னர் அனிருத் அவருடைய இடத்தை நிரப்பினார். இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோலிவுட்டில் அசுர வளர்ச்சி கண்ட அனிருத் இசையையும் மிஞ்சும் அளவுக்கு பிசியான இசை அமைப்பாளராக ஜிவி பிரகாஷ் மாறி உள்ளார். ஜிவி பிரகாஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதற்கு அனிருத் வீழ்ச்சியும் முக்கிய காரணமாகும்.

விடாமுயற்சி படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம்! எவ்வளவு  தெரியுமா

   

அனிருத் எந்த பாட்டு போட்டாலும் ஹிட் ஆகும் என்ற நிலை இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரின் இசை ரசிகர்களுக்கு போர் அடிக்க தொடங்கி விட்டது. அவருடைய இசையில் இறுதியாக வெளியான இந்தியன் 2, தேவரா, வேட்டையன் மற்றும் விடாமுயற்சி என எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளன. மறுபக்கம் ஜிவி பிரகாஷ் குமார் மவுசு அதிகரிக்க தொடங்கி விட்டது. அண்மையில் இவருடைய இசையில் வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றனர்.

   

GV Prakash Kumar: அனிருத் எராவில் நின்னு விளையாடும் ஜி.வி. பிரகாஷ் குமார்..  இத நோட் பண்ணலனா எப்படி? | Music Director GV Prakashkumar Produced Good  Music Better Than Anirudh - Tamil Filmibeat

 

அது மட்டுமல்லாமல் அனிருத்தை காட்டிலும் சம்பள விஷயத்தில் ஜிவி பிரகாஷ் சீப் அண்ட் பெஸ்ட் ஆக திகழ்ந்து வருவதால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அனிருத் ஒரு படத்திற்கு 15 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் சம்பளம் 10 கோடிக்கும் குறைவுதான். அதன் காரணமாகவே தயாரிப்பாளர்கள் அவருக்கு பட வாய்ப்புகளை வழங்கிய வண்ணம் உள்ளனர். தற்போது அஜித் குமாரின் குட் பேட் அக்லி, தனுஷின் இட்லி கடை, கவினின் மாஸ்க், சிவகார்த்திகேயனின் பராசக்தி, ஜிவி பிரகாஷே ஹீரோவாக நடிக்கும் கிங்ஸ்டன், வெற்றிமாறனின் வாடிவாசல் என அவருடைய லைன் ஆப் நீண்டு கொண்டே செல்கின்றது.