இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா..? கண்டுபுடிங்க பாக்கலாம்…

By Begam

Updated on:

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அந்தவகையில் தற்பொழுது  முன்னணி இசையமைப்பாளரான  டி இமான் அவர்களின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து அசத்தி வருகிறார். தல அஜித் நடித்த ‘விசுவாசம்’ படத்தில் இவர் இசையில் வெளியான ‘கண்ணான கண்ணே’ மற்றும் அந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது.

D imman

   

இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு இசையமைத்தார். டி இமான் அவர்கள் விஜய் நடிப்பில் 2002ல் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தற்பொழுது முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டுள்ளார்.

பல அறிமுக பாடகர்களுக்கு வாய்ப்பு அளித்த அவர்களை பின்னணி பாடகர்களாக  மாற்றியவர் டி இமான். ‘விசுவாசம்’ திரைப்படத்தில் இவருடைய இசைக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.  இசையமைப்பாளர் டி இமான் 2008ல் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர்  சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்து விட்டார். இதைத்தொடர்ந்து இவர் அமளி என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகளும் உள்ளார். சமீபத்தில் இமான் அவர்கள் சிவகார்த்திகேயன் பற்றி கூறியது இணையத்தில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இதனால் பெருமளவில் சிவகார்த்திகேயன் இமேஜ் டேமேஜ் ஆனது. தற்பொழுது இசையமைப்பாளர் இமான் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.