அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ட்ராகன். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் மற்றும் அனுபாமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திலிருந்து ரைஸ் ஆப் டிராகன் மற்றும் வழி துணையே ஆகிய பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில் மூன்றாவது பாடல் நேற்று வெளியிடப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டது.

இப்பாடல் காதல் தோல்வி பாடல் என்றும் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளதாகவும் வெளியான ப்ரோமோ வீடியோ பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. இப்படியான நிலையில் மூன்றாவது பாடலான “ஏண்டி விட்டுப் போன” பாடல் நேற்று வெளியானது. இந்த நிலையில் பாடல் உருவாக்கத்தின்போது இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இன் தந்தை இறந்து விட்டதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அவருடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், நேற்று அதிகாலையில் பாடலின் இறுதிப் பணிகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் லியோன் ஜேம்ஸ்ன் தந்தை காலமானார். இந்த செய்தி எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பாடல் வெளியிட்டை தள்ளிப் போடலாமா என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் இல்லை மச்சான், சொன்ன நேரத்திற்கு சரியாக வெளியிடலாம் என்றார். அது என்னை மிகவும் எமோஷனல் ஆகியது.
![]()
லியோன் தன்னுடைய அறையில் பாடலை மிக்ஸிங் செய்து கொண்டிருந்தார். ஹாலில் தனது தந்தையின் இறுதி கடமைகளையும் பார்த்து வந்தார். நேரம், ரசிகர்கள் மற்றும் சினிமாவை நேசிக்கும் சாதாரண பார்வையாளர்களுக்கு அவர் காட்டும் மரியாதை. அவர் ஒரு ஜெம். ஏண்டி விட்டுப் போன பாடலை லியோனின் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அஸ்வத் பதிவிட்டுள்ளார்.
Leon’s father passed away yesterday early morning as the final mix of the song was happening . It was a shock ! I asked him if we can push the song release but he said no Macha let’s stick to the ‘TIME’ that we have promised . It was very emotional for us ! He was mixing the… pic.twitter.com/Ie5yLwZHyy
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) January 28, 2025
