தினம் தினம் தொல்லை கொடுத்த கணவன்… சித்திரவதை தாங்காமல் இரவோடு இரவாக கழுத்தறுத்துக் கொன்ற மனைவி… தமிழகத்தில் நடந்த பயங்கரம்…!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் கவுசல்யா மற்றும் சோபிதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வருகின்றன. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நேரு தெருவில் வாடகைக்கு சென்ற நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக வசித்து வருகிறார்கள். விநாயகம் நேரு தெருவுக்கு அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

ஆனால் கடந்த ஆறு மாதமாக அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். விஜயா சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே கணவன் விநாயகம் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்ததால் கடந்த ஆறு மாதமாக வேலைக்கு செல்லாத காரணத்தால் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இந்த குடிப்பழக்கத்தால் கணவன் மனைவியிடையே தினமும் வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. அதேபோல நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது விநாயகம் விஜயாவை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம் அடைந்த விஜயா கணவன் என்றும் பாராமல் காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியால் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் கணவன் இறந்ததை அறிந்த விஜயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விஜயாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் கணவன் குடித்துவிட்டு தகராறு செய்ததில் அவரே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

14 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

29 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

37 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

48 minutes ago

78 வயதில் இப்படியா..? மிரட்டி விட்டுடாங்க…! ‘ராஸ்புடின்’ பாடலைப் பாடி அரங்கைக் அதிரவைத்த உஷா உதுப்… உற்சாகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…

1 மணத்தியாலம் ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

1 மணத்தியாலம் ago