கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மரியோரோசாரியோ என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் மரியோ ரோசாரியோவின் தாயுடன் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மரியா ரோசாரியின் தாய் கிறிஸ்தோப்மேரி குடும்பத்திற்கு நல்லது நடக்க சில சாங்கியம் செய்ய வேண்டும் என்று நந்தினியை அழைத்துச் சென்றுள்ளார். பிறகு இரண்டு நாட்கள் ஆகியும் நந்தினி மற்றும் தாய் வீடு திரும்பாததால் கணவன் தனது மனைவி நந்தினி செல்போன் மற்றும் தாயின் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் எண்கள் ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரைப் பெற்ற காவல் துறையினர் முதல் கட்டமாக மருமகளை அழைத்துச் சென்ற மாமியார் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.
அதாவது சாங்கியம் செய்ய வேண்டும் என சோளம் பட்டு கிராமம் அழகாபுரம் செல்லும் சாலையில் மணிமுத்தா ஆற்றின் கரையோரம் தன்னுடைய மருமகளை அழைத்துச் சென்ற மாமியார் நந்தினியின் தலையை துண்டித்து கொலை செய்து அதன் பிறகு உடலை தனித்தனியாக வெட்டி ஆட்டம் கரையோரம் வெவ்வேறு இடங்களில் புதைத்து விட்டதாக தெரியவந்துள்ளது.
எனவே அப்பகுதியில் ஆற்றம் கரையோரம் தற்போது போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட உடல் பாகங்கள் தோண்டப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மருமகளை மாமியார் தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
