“எங்க அப்பா செத்த மாதிரியே நீயும் சாவு”… சொந்த சித்தப்பாவை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற மகன்… பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் தெறித்த ரத்தம்…!

Spread the love

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி (33) என்பவர் கொத்தனார் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே இவருடைய உடன்பிறந்த அண்ணன் வெங்கடேசன் என்பவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிர் இழந்த நிலையில் வெங்கடேஷன் உயிரிழப்புக்கு தம்பி ராமசாமி குடும்பம் தான் காரணம் என்று நினைத்து வெங்கடேசன் குடும்பத்தினர் பிரச்சனை செய்து வந்துள்ளனர்.

வெங்கடேசன் மற்றும் ராமசாமியின் வீடுகள் அருகருகே இருப்பதால் இரு குடும்பத்தினருக்கும் இடையே இட பிரச்சனையும் இருந்துள்ளது. எனவே இரண்டு குடும்பத்தினருக்கும் நீண்ட நாள் பகை இருந்து வந்த நிலையில் வெளியூருக்கு வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்த ராமசாமி நேற்று மதுரை மாவட்டத்திற்கு கொத்தனார் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பி ஆவியூர் பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த ராமசாமியின் அண்ணன் வெங்கடேசனின் 20 வயதுடைய மகன் பிரவீன் மற்றும் அவருடைய நண்பர்களான செல்லப்பாண்டி, கருப்பசாமி, சஞ்சீவ் ஆகிய நான்கு பேரும் கஞ்சா போதையில் அறிவாளால் கத்தியுடன் ராமசாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். அப்போது பிரவீன், எங்க அப்பாவை கொன்னுட்டீங்க அதே மாதிரி நீயும் சாவு என்று கூறி வெட்டிய நிலையில் அவர்களை தடுக்க வந்த பொது மக்களையும் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமசாமியை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ராமசாமியை கொலை செய்து தப்பி ஓடிய நான்கு பேரும் போலீசில் சரணடைந்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சித்தப்பாவை சொந்த அண்ணன் மகனே கஞ்சா போதையில் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பெண்களுக்கு ஜாக்பாட்…. மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும்?… வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500-ஆக உயர்த்தப்பட்டு வெகு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி சிவகாசி அருகே செய்தியாளர்களைச் சந்தித்தபோது…

2 minutes ago

மகளைக் காப்பாற்றச் சென்ற வழியில் காத்திருந்த எமன்…! ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி தாய், மகள் பரிதாப பலி… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஆதில்பாத் மாவட்டம் கடிகுடா பகுதியைச் சேர்ந்தவர் மெஸ்ராம் பருபாய் (55). இவரது மகள் மெஸ்ராம் சரஸ்வதி (22).…

12 minutes ago

இதுதான் உண்மையா..! விஜய் சார் என் லக்கி சார்ம்… சினிமா டு கோட்டை… அமைதியா இருந்து ஆட்சியை பிடிச்சிட்டாரு… CM விஜய் குறித்து சமந்தா அதிரடி பேச்சு…!!

'செலிபிரிட்டி மாஸ்டர் செஃப்' தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று வரும் நடிகை சமந்தா, அதில் தமிழக முதல்வர் விஜய்…

15 minutes ago

மைத்துனருடன் கள்ளக்காதல்…! கணவரை விட்டு பணம், நகையுடன் ஓடிய இளம்பெண்… கால்வாயில் கிடந்த சடலம்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

திருமணமான பெண் ஒருவர் தனது உறவினர் முறை உடைய மைத்துனருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பின் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற சில…

24 minutes ago

“என்னை சித்திரவதை பண்றீங்களா…?” கணவரை பழிவாங்க மகன், 11 வயது சிறுவனை கொன்ற தாய்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த கொடுமைக்குப் பழிவாங்கும் நோக்கில், தனது 8 வயது…

34 minutes ago

“சும்மா கேஷுவலா நிற்போம்…” கடைக்குள் வந்து தங்க நகையை அபேஸ் செய்த மர்ம நபர்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகாடி சாலை, பின்னூப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி ஜூவல்ஸ் என்ற நகைக் கடையில், வாடிக்கையாளர் போல்…

47 minutes ago