“டேய் மச்சான் உன் தங்கச்சி நச்சுனு இருக்காடா”… நண்பனின் தங்கையை தவறாக பேசிய கூட்டாளி… தலையில் கல்லை போட்டு அண்ணன் செய்த கொடூரம்…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிலியம் பட்டியை சேர்ந்த சூர்யா என்பவர் அதே பகுதியை சேர்ந்த மனோகரன் மற்றும் பசுபதி ஆகிய இரண்டு பேருடன் பழகி வந்துள்ளார். இவர்கள் மூன்று பேருமே சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். சூர்யா கூலித்தொழில் செய்து வந்த நிலையில் பசுப்பதி ஜேசிபி ஓட்டுனராகவும் மனோகரன் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்தும் நடத்தி வந்துள்ளனர். இதில் பசுபதிக்கு 21 வயதில் தங்கை உள்ளார். மூன்று பேரும் நண்பர்கள் என்பதால் அடிக்கடி சூர்யா மற்றும் மனோகரன் பசுபதி வீட்டுக்கு செல்வதால் அவருடைய குடும்பத்துடன் நன்கு பழகி வந்துள்ளனர்.

மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து இரவு நேரங்களில் கிராமத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாந்தோப்பில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். சூர்யா பசுபதியிடம் அடிக்கடி, மச்சான் உன் தங்கச்சி அழகா இருக்கா என்று கூறிவந்துள்ளார். ஆரம்பத்தில் நண்பன் ஏதோ விளையாட்டாக சொல்கிறார் என்று நினைத்த பசுபதி அதனை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். ஆனால் நாளுக்கு நாள் சூர்யா பசுபதியின் தங்கை குறித்து தவறாக பேச தொடங்கியுள்ளார்.

   

இதனால் கோபமடைந்த பசுபதி சூர்யாவை கண்டித்ததாக தெரிகிறது. இருந்தாலும் சூர்யா தொடர்ந்து பசுபதியின் தங்கை குறித்து தவறாக பேசினார். வழக்கம்போல மூன்று பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாந்தோப்பிற்கு மது அருந்த சென்றுள்ளனர். பிறகு ஒன்றாக அமர்ந்து மது அருந்திய நிலையில் சூரியா பசுபதி இடம், டேய் மச்சான் உன் தங்கச்சி நச்சுனு இருக்கா என்று கூறியுள்ளார். அதே சமயம் அவருடைய தங்கையின் நம்பர் கொடுக்க சொல்லி கேட்டு தொல்லை செய்துள்ளார். நம்பர் கொடுக்கவில்லை என்றால் பசுபதி மற்றும் அவரது காதலியின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

   

இதனால் ஆத்திரமடைந்த பசுபதி மற்றும் மனோகரன் நண்பனின் தங்கை உனக்கும் தங்கை போல இப்படி பேசுகிறாயே என்று கண்டித்துள்ளனர். இருந்தாலும் சூர்யா நிறுத்தாமல் தொடர்ந்து பசுபதியின் தங்கை பற்றி பேசியதால் பசுபதி மற்றும் மனோகரன் சேர்ந்து சூர்யாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மறுநாள் காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களுடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பசுபதி மற்றும் மனோகரனை கைது செய்த விசாரித்து வருகிறார்கள்.