கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அடுத்துள்ள கோவில்புரத்தைச் சேர்ந்த 44 வயதுடைய கண்ணன் என்பவர் டெம்போ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்த்திகை வடலி பகுதியில் உள்ள ஆற்றோரத் தென்னந்தோப்பில் கண்ணன் நிர்வாணமான நிலையில், வெட்டுக் காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். உடலைக் கைப்பற்றிய ராஜாக்கமங்கலம் போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோணம் பகுதியைச் சேர்ந்த ஜான்சிலி மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், சம்பவத்தன்று இரவு கண்ணனும் ஜான்சிலியும் அந்தத் தென்னந்தோப்பில் அமர்ந்து மது அருந்தியது தெரியவந்தது. அப்போது போதை தலைக்கேறிய நிலையில், ஜான்சிலி கண்ணனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு கண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த ஜான்சிலி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார். ஜான்சிலியின் இந்த வெறிச்செயலுக்கு அங்கிருந்த இரண்டு சிறுவர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
தற்போது ஜான்சிலியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணையில் சம்பந்தம் இல்லை எனத் தெரிந்த மற்றொரு நபர் விடுவிக்கப்பட்டார். ஓரினச் சேர்க்கைக்கு உடன்படாததால் ஒரு டெம்போ ஓட்டுநர் மதுபோதையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…