திடீரென கேட்ட சத்தம்… கதவைத் திறந்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி… மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்…!

By Nanthini on ஐப்பசி 23, 2025

Spread the love

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சின்ன செட்டி தெருவை சேர்ந்த நடராஜ் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகின்றார். நடராஜுக்கும் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனிடையே நடராஜ் மனைவி கோமதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடராஜ் வேலைக்கு சென்ற பிறகு பள்ளிக்கு விடுமுறை என்பதால் அவருடைய மகள் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நேரத்தில் பின்பக்க கதவை மறுமண நபர்கள் தட்டி உள்ளனர். சத்தம் கேட்டு கதவைத் திறந்த கோமதியை வீட்டிலிருந்த அவருடைய மகன் கண் முன்னே இரண்டு மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் வெட்டினர்.

இதில் கோமதியின் கழுத்து மற்றும் கைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த காயங்களோடு மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்து மகன் கதறிய நிலையில் கோமதியை கத்தியால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோமதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று முன்தினம் தீபாவளி முடிந்த நிலையில் பெண் ஒருவரை வீடு புகுந்து மகன் கண்முன்னே வெட்டி கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.