500 கோடி சொத்துக்காக ராஜ்கிரண் மகளை வளைத்துபோட்ட முனீஸ் ராஜா..? ஜீனத் பிரியா மன்னிப்பு கேட்டது இதனால் தான்.. பகீர் கிளப்பிய பயில்வான்..

By Archana

Updated on:

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90 காலகட்டத்தில் கிராமத்து ஹீரோவாக வலம் வந்தார் நடிகர் ராஜ்கிரண். அவர் கறியை எடுத்து உண்ணும் விதமே பலரின் ஃபேவரைட். இன்றும் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் வேஷ்டி கட்டியே படங்களில் நடித்து வருபவர், நேரிலும் அப்படியே எளிமையாகவே இருப்பார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். மகளின் பெயர் ஜீனத் பிரியா.

sa 15 2024 02 06t111807 681 1707198559

இவர் நாதஸ்வரம் சீரியலில் நடித்த முனீஸ் ராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு ராஜ்கிரண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேரி முனீஸ் ராஜை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், ஜீனத் தனது சொந்த மகள் இல்லை என்றும், அவர்கள் இருவரும் தன் பெயரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். முனீஸ் ராஜ் மற்றும் ராஜ்கிரணின் மகள் இருவரும் திருமணத்திற்கு பிறகு வெளியிட்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது. பலரும் இந்த ஜோடிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

   

இந்த நிலையில், திருமணமான ஒரு வருடத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக ஜீனத் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தனது தந்தையை மீறி முனீஸ் ராஜை திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய தவறு எனவும், அவரை மிகவும் வேதனைப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பேசிய முனீஸ் ராஜ், ஜீனத்தின் பின்னணியில் இருப்பது யார் என உலகிற்கே தெரியும் என சூசகமாக குற்றம்சாட்டியுள்ளார்.

sa 15 2024 02 01t132034 226 1707113180

இந்த சர்ச்சை தொடர்பாக பேசியுள்ள நடிகர் ராஜ்கிரண், முனீஸ் ராஜா, தினமும் மது அருந்திவிட்டு தனது மகளை அடித்து கொடுமை படுத்தியதாகவும், தன்னிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். தன் மகள் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு, ரத்த வாந்தி எடுக்கும் அளவுக்கு கொடுமைகளை அனுபவித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தகவல் வந்ததும், வேறு ஒருவர் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததாகவும் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். ஃபேஸ் மூலம் வளர்ந்த இவர்களது காதல், திருமணமான ஒரு வருடத்திற்குள் கசந்து போனது.

63200736beef7

ராஜ்கிரண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று பிறகு பத்மஜா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். பத்மஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஜீனத் பிரியா இருந்த நிலையில், அவரது கணவரை பிரிந்து தனியே வாழ்ந்து வந்துள்ளார். அந்த சூழலில் தான் ராஜ்கிரண் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பத்மஜாவின் மூலம் 500கோடி ரூபாய் சொத்துக்கு ஜீனத் அதிபதியாகியதாகவும், அதனை அடையவே முனீஸ் ராஜ் இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும் பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். ஆனால் இது உண்மையா இல்லையா என்பது ஜீனத் வெளிப்படையாக கூறினால் மட்டுமே வெளிச்சத்திற்கு வரும்.

kk11800942
author avatar
Archana