விஜய் ஹசாரே கோப்பை (2025-26) தொடரில் இன்று (டிசம்பர் 26, 2025) நடைபெற்ற போட்டியில் மும்பை வீரர் ரகுவன்ஷியின் தலையில் காயம் ஏற்பட்டது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்தது. ஆட்டத்தின் 30-வது ஓவரில் தனுஷ் கோடியன் வீசிய பந்தில், பேட்டர் சௌரப் ராவத் அடித்த கடினமான கேட்சை டைவ் அடித்துப் பிடிக்க முயன்ற போது ரகுவன்ஷியின் தலை தரையில் பலமாக மோதியது.
மைதானத்தில் இருந்து அவர் உடனடியாக ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள SDMH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு CT ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரிசோதனை முடிவுகள் சாதாரணமாக வந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தங்கும் விடுதிக்குத் திரும்பியுள்ளார். தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…