தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் களத்தில் உள்ள நிலையில் விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. கட்சி தொடங்கிய பிறகு முதல் தேர்தலை சந்திக்கும் விஜயின் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். விஜய் அமைக்கும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற வாய்ப்புள்ளதாக சமீப காலமாகவே ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுசாமி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், செல்வாக்கு அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. அதில் நான் மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என ஏராளமானோர் பங்கேற்ற பேசியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு உள்ளது.
காங்கிரஸின் அடிமட்ட தொண்டர்கள் திமுக மீது கோபத்தில் இருப்பது உண்மைதான். ஒரு இயக்கம் அடிமட்டத்தில் வளர வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் இருப்பது அவசியம். ஆனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் அவமானப்படுத்தியதாக தொண்டர்கள் கூறுகின்றனர். ஒரு சில இடங்களை காங்கிரஸுக்கு ஒதுக்கி விட்டு அந்த இடங்களிலும் பண பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்தனர். இந்த குமரல்தான் இன்று ஆர்ப்பரியாக வெளிப்படுகிறது. எம்எல்ஏ எம்பி ஆக இருப்பவர்கள் ஒரு சில பயனாளிகளை தவிர யாரும் திமுகவுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவரை மட்டும் கையில் வைத்துக்கொண்டு மற்ற காங்கிரஸ் கட்சியினரை கீழ்தரமாக நடத்துவதாக நினைக்கின்றன. நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிமட்ட தொண்டர்கள் உள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் என்றால் அது பெருந்தலைவர் காமராஜர் தான். ஆனால் அவரையும் அவமானப்படுத்தினார்கள். கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என்று தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.
எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு முடிவு செய்ய வேண்டும். ஒரு சிலர் திமுக கூட்டணியை விரும்புவதாகவும் மற்றொரு தரப்பினர் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணியை விரும்புவதாகவும் கூறப்படுவதில் உண்மை கிடையாது. அவ்வாறு கூறி காங்கிரசை துண்டாக்க முடியாது. அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டுமொத்த மனநிலையும் திமுக கூட்டணி கூடாது என்பதாக தான் உள்ளது. அதன் வெளிப்பாடு தான் காங்கிரசை தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க தூண்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…