தேனி அல்லிநகரம் பகுதியில் வசிக்கும் பாஸ்கரன் என்ற முதியவருக்கும், அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் இடையே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்துள்ளது. இதன் உச்சகட்டமாக, பாஸ்கரன் வீட்டு கழிவுநீர் வெளியேறும் வாய்க்காலை மாரிமுத்து சிமெண்ட் கலவை ஊற்றி மூடிவிட்டார்.
இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி வீட்டின் முன்பே தேங்கி, கடுமையான துர்நாற்றம் வீசியதுடன் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தட்டிக்கேட்ட பாஸ்கரன் குடும்பத்தினரை, மாரிமுத்துவின் மனைவி மற்றும் மகன் ஆபாசமாகப் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிசிடிவி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், கடந்த நான்கு மாதங்களாகக் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட முதியவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், புகாரை வாபஸ் பெறக் கோரி மாரிமுத்து குடும்பத்தினர் தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட ஒரு அடி பாதை பிரச்சனை, தற்போது ஒரு முதியவர் குடும்பத்தைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…