Whatsapp பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை…. ரூ.3 கோடியை அசால்ட் ஆக தூக்கிய கும்பல்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

Spread the love

போலியான ஆன்லைன் முதலீட்டு வர்த்தக whatsapp குழு மூலமாக சுமார் 3.4 கோடி மோசடி செய்த வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 3 நபர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த சத்தியநாதன் (68) என்பவர் அளித்த புகாரியின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதத்தில் பெங்களூரை சேர்ந்த Fyers Securities அதிகாரிகள் என்று கூறிய மர்ம நபர்கள் அவரை FYERS VIP என்ற whatsapp குழுவில் இணைத்துள்ளனர்.

அதில் முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான தொழில் முறை விவாதங்கள் மூலமாக நம்பிக்கை ஏற்படுத்தி FYERSHNI என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கூறியதால் சத்தியநாதன் ஜூலை 7 முதல் ஜூலை 25ஆம் தேதி வரை தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து மூன்று கோடியே 40 லட்சத்தை மோசடியாளர்களுக்கு குறிப்பிட்ட 13 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்துள்ளார்.

பிறகு முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற முயற்சித்தபோது அந்த மொபைல் செயலி முற்றிலும் முடக்கப்பட்டு காணாமல் போனது. இதனை தொடர்ந்து தன்னை ஏமாற்றியதை உணர்ந்த அவர் சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து துரிதமாக செயல்பட்டு இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய எதிரியான பாலசுப்பிரமணியன் தஞ்சாவூர் ஜெகநாத் நகர் பகுதியை சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த முருகேஷ், எப்சி மற்றும் பஞ்சவர்ணம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் எப்.சி மற்றும் பஞ்சவர்ணம் ஆகியோர் பெண்கள். விசாரணையில் முக்கிய எதிரிகள் தலைவர்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள நபர்களை அணுகி வங்கி கணக்குகள் கொடுத்தால் அதிக கமிஷன் என்று ஆசை வார்த்தை கூறி பயன்படுத்தியது. சில வங்கி கணக்குகள் மூலம் சுமார் 45 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யப்பட்டு காசோலை மூலமாக பணம் எடுக்கப்பட்டதுடன் அதற்காக கமிஷன் வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

4 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

4 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

7 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

7 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago