அம்மாடியோ… இது என்ன புதுசா இருக்கு… குப்பையை கீழே போட்ட அடுத்த வினாடி அலறிய ஸ்பீக்கர்… மும்பை மாநகராட்சியின் AI ஸ்கெட்ச்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 30, 2026

Spread the love

மும்பை நகரில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்கும் நோக்கில், மும்பை மாநகராட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களைப் பொருத்தத் தொடங்கியுள்ளது. மாகிம் பகுதியில் உள்ள டாக்டர் ராய்கர் மார்க்கில் அமைந்துள்ள கஜணன் வாடிகா பகுதியில் இத்தகைய நவீன கேமராக்கள் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன.

பொதுமக்கள் யாராவது குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசும்போது, இந்த ஸ்மார்ட் கேமராக்கள் உடனடியாகக் கண்டறிந்து, அருகில் உள்ள ஒலிபெருக்கி மூலம் உடனடியாக எச்சரிக்கை ஒலியை எழுப்புகின்றன. இந்த அதிநவீன கண்காணிப்பு முறை பொதுமக்களைப் பொறுப்புடன் நடந்து கொள்ளச் செய்வதோடு, நகரைத் தூய்மையாக வைத்திருக்கவும் பெரிதும் உதவும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

https://www.instagram.com/reel/DfEYP5xkgRu/?utm_source=ig_web_button_share_sheet

   

சமூக வலைதளங்களில் இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்குத் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மும்பை முழுவதும் உள்ள மற்ற முக்கியப் பகுதிகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.