1963 ஆம் ஆண்டு “ஸ்ரீதர்” அவர்கள் இயக்கத்தில் கல்யாண் குமார், தேவிகா, நாகேஷ், பத்மினி பிரியதர்ஷினி, நம்பியார் போற்றவர்களின் நடிப்பில் வெளியாகிய மாபெரும் வரவேற்பு கிடைத்த படம் தான் “நெஞ்சம் மறப்பதில்லை”. இப்படத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி இசையில் உருவாகியுள்ளத. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மனோரமா நடித்திருக்கிறார். ஸ்ரீதர் இயக்கத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி 1969ல் தமிழ் சினிமா திரையில் வெளியாகி யாரும் பார்க்காத அளவிற்கு மக்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று பட்டி தொட்டி எல்லாம் இப்படம் ஒலித்தது.
நாயகனுக்கும் நாயகிக்கும் இடைப்பட்ட காதலில் வரும் பிரச்சனை, அதற்கு காரணமாக இருக்கும் அமானுஷ்யமான விஷயங்களை கண்டறிந்து அதை மாற்றி கதாநாயகியை காப்பாற்றுவதே இப்படத்தின் கதை ஆகும். அந்த சமயத்தில் இப்படி ஒரு கதை தமிழ் சினிமாவில் யாரும் எடுக்காமல் இருந்ததால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை பார்த்த மக்கள் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள். இதில் கல்யாணம் அவர்களும் பத்மினியின் நடிப்பும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதை தாண்டி இப்படத்தின் வரும் நெஞ்சம் மறப்பதில்லை பாடல் மாபெரும் வரவேற்பு கிடைத்தது, தற்போது வரை இப்படத்தின் பாடலை மக்கள் ரசிக்கும் அளவிற்கு பிரமாதமாக இருக்கும்.
தற்போதைய பாடல் உருவான சுவாரஸ்யமான கதையை சித்ரா அவர்கள் வெளியிட்டு இருக்கிறார். நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் இசையமைத்த எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடல் உருவாகுவதற்காக கிட்டத்தட்ட 250 இசையை அமைத்துள்ளார். ஆனால் எதுவுமே படத்திற்கும் பாடலுக்கும் ஒத்துப் போகாமல் இருந்ததால், மிகக் குழப்பத்தில் இருந்தார்கள். அந்தப் பாடலுக்காக மட்டும் விஸ்வநாதன் அவர்கள் கிட்டத்தட்ட ஆறு மாத காலமாக வேலை செய்து வந்தார்.
ஆனாலும் இப்பாடலின் டியூன் பிடிபடவில்லை, தற்செயலாக சித்ரா அவர்கள் இப்பாடலின் டியூன் ஒன்றை யோசித்து விஸ்வநாதன் அவர்களிடம் சொன்னவுடன் விஸ்வநாதனுக்கு பிடித்துப் போக, அதில் உருவானது தான் இந்த “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற பாடல் ஆகும். இப்பாடலில் மேலும் ஒரு அழகான விஷயம் என்னவென்றால், பி. சுசிலா அவர்களின் குரலில் பாடியதுதான் என்று எம்.எஸ் விஸ்வநாதன் பல மேடைகளில் பெருமிதமாக பேசி உள்ளார்.