ஏ.ஆர் ரகுமான் கூப்பிட்டு நிறைய சம்பளம் கொடுத்தாரு தம்பி.. SPB-யிடம் சொல்லி நெகிழ்ச்சியடைந்த இசை ஜாம்பவான்..!!

By Priya Ram

Published on:

பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ் விஸ்வநாதன் தமிழ் சினிமாவில் சுமார் 9500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஏ.ஆர் ரகுமான், இளையராஜா, கங்கை அமரன் இசையில் பாடல்களையும் பாடியுள்ளார். இந்த நிலையில் ஒரு சுவாரசியமான அனுபவம் குறித்து எஸ்.பி பாலசுப்ரமணியம் பேசிய பழைய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

   

அதில் ஒரு முறை பாடல் பாடுவதற்காக எம்.எஸ் விஸ்வநாதனை ஏ.ஆர் ரகுமான் அழைத்துள்ளார். அப்போது ஏ.ஆர் ரகுமான் ஐயா நான் பாடல் சொல்லித்தர மாட்டேன். நீங்களாகவே பாடுங்கள் என கூறியுள்ளார். அதற்கு எம்.எஸ்.வி தம்பி நானாக பாடமாட்டேன் நீ சொல்லித் தருவதை தான் பாடுவேன் என அடம்பிடித்துள்ளார். அதற்கு ஏ.ஆர் ரகுமான் ராகத்தை நான் சொல்கிறேன் உங்கள் இஷ்டப்படி நீங்கள் பாடுங்கள் என கூறியுள்ளார்.

ஒரு வழியாக 4 மணி நேரம் ரெக்கார்டிங் முடிந்த பிறகு எம்.எஸ்.வி ரகுமானிடம் அந்த பாடலை போட்டுக் காட்டுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஏ.ஆர் ரகுமான் ஐயா இன்னும் கொஞ்சம் எடிட்டிங் வேலைகள் இருக்கிறது. அதனை முடித்து உங்களுக்கு போட்டு காட்டுகிறேன் என கூறியுள்ளார். ஒருவேளை நம் சரியாக பாடவில்லையோ? அந்த பாடல் ரகுமானுக்கு பிடிக்கவில்லையோ என குழப்பத்தோடு எம்.எஸ் விஸ்வநாதன் எஸ்.வி பாலசுப்ரமணியனிடம் புலம்பியுள்ளார்.

மேலும் அந்த தம்பி நல்ல நிறைய சம்பளம் கொடுத்தாரு. அந்த பாடலை கொஞ்சம் போட்டு காட்ட சொல்லுப்பா என எம்.எஸ்.பி பாலசுப்ரமணியனிடம் கேட்டுள்ளார். ஒருமுறை அந்த பாடல் ரேடியோவில் ஒலித்துள்ளது. அதனை கேட்டதும் எம்.எஸ் வி நான் பாடிய பாடல் எடிட்டிங் எல்லாம் சேர்த்து சூப்பராக இருக்கிறது என ஆசிரியப்பட்டு ஏ.ஆர் ரகுமானை பாராட்டியுள்ளார். இந்த அனுபவத்தை எஸ்.பி பாலசுப்ரமணியம் பகிர்ந்துள்ளார்.

author avatar
Priya Ram