என்னைக்குமே தல தல தான்… ரசிகரின் பைக்கில் ஆட்டோகிராப் போட்ட தோனி… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!

By Nanthini on கார்த்திகை 9, 2025

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகின்றார். இந்திய அணிக்காக கபில்தேவுக்கு பிறகு இரண்டாவது உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்தவர் தான் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இவர் ஓய்வை அறிவித்த பிறகு இவர் பற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அதன்படி தற்போது அவர் ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டாலும் சரி, பைக் ஓட்டினாலும் சரி, விமான நிலையத்தில் இருந்து நடந்து வந்தாலும் கூட உடனே அவர் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி விடுகிறது. அதன்படி ரசிகர் ஒருவரின் பைக்கில் எம்.எஸ் தோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.