‘இதனால் என் காதலர் என்னைவிட்டு விலகிவிட்டார்’… காதலர் குறித்து உருக்கமாக பேசிய ‘சீதா ராமம்’ பட நடிகை..

By Deepika

Updated on:

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்ததில் குறிப்பிடத்தக்கவர் நடிகை ம்ருணாள் தாக்கூர். சீதா மஹாலட்சுமி என்றால் இன்னும் சட்டென நியாபகம் வரும். சீதாராமம் என்ற ஒற்றை படம் மூலம் தென்னகத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் ம்ருணாள் தாக்கூர். ராம் மட்டுமல்ல இந்த இளவரசியை பார்த்து நாமும் கரைந்து போனோம் என்பதே உண்மை ஹாய் நான்னா, பேமிலி ஸ்டார் என தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Mrunal thakur as sita mahalakshmi

இவர் தமிழ் சினிமாவுக்கு எப்போது வருவார் என சில ரசிகர்கள் எதிர்பார்க்க சிலரோ பொறுமையாக வரட்டும், நல்ல கதைகளில் நடிக்கட்டும் என கூறி வருகின்றனர். சீதாராமம் படத்தில் இவர் நடித்தாலும் நடித்தார். ஆண்கள் மட்டுமல்ல பெண்களுக்கும் இவர் பிடித்து போய் விட்டார். குறிப்பாக ஆண்கள் எல்லாம் சீதா மாதிரி பெண் வேண்டும் என கேட்க ஆரம்பவித்து விட்டார்கள்.

   
Mrunal about her breakup

இப்படி பலரின் காதலை பெற்ற ம்ருணாளுக்கும் காதல் தோல்வி வந்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு பெட்டியில் ம்ருணாள் தாக்கூர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நான் ஒருவரை தீவிரமாக காதலித்தேன் அவரும் என்னை காதலித்தார். ஆனால் நான் ஒரு நடிகை என்பதால், அவர் குடும்பம் என்னை ஏற்கவில்லை. மிக ஆச்சாரமான குடும்பம் அவருடையது. அதனால் அவர் வேண்டாம் என சொல்லிவிட்டார்.

Mrunal about her breakup

என் மனதில் அது ஒரு வலியாக உள்ளது, ஆனால் நம் வாழ்க்கையில் நல்ல மனிதர்களை சந்திக்க வேண்டும் என்றால் இதையும் நாம் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார் ம்ருணாள் தாக்கூர். சீதாவை எப்படி வேண்டாம் என சொல்லலாம் அவன் வாழ்க்கையில் நிச்சயம் வருத்தப்படுவா என ம்ருணாள் தாக்கூர் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

author avatar
Deepika