தெலுங்கு நடிகரை திருமணம் செய்கிறாரா சீதா ராமம் பட நடிகை..? அவரே வெளியிட்ட பதிவு..!!

By admin on கார்த்திகை 6, 2023

Spread the love

தெலுங்கில் வெளியான சீதாராமம் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் ஹிந்தி நடிகை மிருணாள் தாக்கூர். இவர் ஃபேமிலி ஸ்டார், ஹாய் நன்னா போன்ற தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் சீதாராமம் படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது மிருணாள் தாக்கூருக்கு வழங்கப்பட்டது.

   

அந்த விருதினை தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்த் வழங்கியுள்ளார். மேலும் மிருணாள் தாக்கூர் கூடிய சீக்கிரமே தெலுங்கு மணமகனை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆக வேண்டும் என மேடையில் வைத்து அல்லு அரவிந்த் கூறினார்.

   

 

உடனே மறுநாள் தாக்கூர் யாரோ தெலுங்கு நடிகரை காதலிக்கிறார். அதனால் தான் அல்லு அரவிந்த் அப்படி ஒரு செய்தியை வெளியிட்டார் என பரபரப்பு செய்திகள் உலா வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மிருணாள் தாக்கூர் கூறியதாவது நான் தெலுங்கு நடிகரை காதலிக்கவில்லை.

திருமணமும் செய்யவில்லை. அந்த விழாவில் அல்லு அரவிந்த் விளையாட்டாக தான் பேசினார். அதனை வைத்து தெலுங்கு நடிகர்களுடன் என்னை இணைத்து செய்திகளை வெளியிட வேண்டாம் என கூறியுள்ளார்.