அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்த போதிலும், அவருக்கு எதிர்பார்த்த மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சியின் தலைமை மீது ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி காரணமாகவே, மற்றொரு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பாணியில் தனது பதவிகளைத் துறந்துவிட்டு, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைய அவர் திட்டமிட்டுள்ளதாக முக்கிய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
