Connect with us

இப்படி ஒரு நடிகரா..? தான் நடிச்ச காட்சி நல்லா இல்லை என்பதற்காக அன்று ஷூட்டிங்கின் மொத்த செலவையும் ஏற்ற MR.ராதா..!!

CINEMA

இப்படி ஒரு நடிகரா..? தான் நடிச்ச காட்சி நல்லா இல்லை என்பதற்காக அன்று ஷூட்டிங்கின் மொத்த செலவையும் ஏற்ற MR.ராதா..!!

 

கடந்த 1960-ஆம் ஆண்டு கைராசி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை கே.சங்கர் இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம்.ஆர் ராதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வாசு தேவன் மேனன் தயாரித்தார். கைராசி படத்தின் ஷுட்டிங்கில் எம்.ஆர் ராதா கலந்து கொண்டார். அந்த நாட்களில் அவர் ஒரே நாளில் இரண்டு மூன்று பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார்.

பல்துறை வித்தகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40ஆவது நினைவு நாள் | Versatile  Actor M.R.Radha's 40th Death Anniversary - Tamil Filmibeat

   

கைராசி படத்தின் ஒரு நாள் ஷூட்டிங்கை எம்.ஆர் ராதா நடித்து முடித்துக் கொடுத்தார்.ஆனால் இயக்குனர் எதிர்பார்த்த அளவு அந்த சீன் சரியாக அமையவில்லை. இதுகுறித்து இயக்குனர் கே.சங்கர் தனது உதவி இயக்குனரிடம் கூறியுள்ளார். உதவி இயக்குனர் எம்.ஆர் ராதாவின் மேக்கப் கலைஞரான கஜபதி என்பவரிடம் கூறியுள்ளார். மறுநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எம்.ஆர் ராதா ரெடியாக வந்தார்.

எம்.ஆர்.ராதா நடிப்பில் திருப்தி அடையாத இயக்குநர்.. பதிலுக்கு எம்.ஆர்.ராதா  செய்த காரியம்

அப்போது கஜபதி இயக்குனர் சங்கர் கூறியதை ஒரு வார்த்தை விடாமல் அப்படியே கூறியுள்ளார். உடனே எம்.ஆர் ராதா தனது காரில் இயக்குனரின் வீட்டிற்கு சென்றார். அங்கு ஏற்கனவே தயாரிப்பாளரும் இருந்தார். அப்போது நான் நடித்துக் கொடுத்த காட்சி நன்றாக இல்லையா? அந்த காட்சியை மீண்டும் நான் நடித்துக் கொடுக்கிறேன். சூட்டிங் ஸ்பாட்டை ரெடியாக வைத்திருங்கள் என எம்.ஆர் ராதா கூறியுள்ளார்.

எம்.ஆர்.ராதா பேரனிடமிருந்து ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு... | nakkheeran

மேலும் அன்றைய நாள் முழுவதும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஆன செலவை தானே ஏற்றுக் கொள்வதாக எம்.ஆர் ராதா கூறினார். கூறியபடி அந்த காட்சியையும் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். அதற்கு உண்டான செலவையும் எம்.ஆர் ராதா தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டார். தான் நடித்து முடித்த காட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை என நினைக்காமல் காட்சியையும் சிறப்பாக நடித்துக் கொடுத்து அதற்கான செலவையும் ஏற்று கொண்டவர் எம்.ஆர் ராதா.

திரைப்படத்இயக்குனர் மற்றும் தொகுப்பாளர் கே. சங்கர் மறைந்த தினம் - Cinemapluz

author avatar
Priya Ram
Continue Reading
To Top