பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் லாஸ்லியா .. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

By Nanthini on தை 14, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென அவர் விலகியதால் தற்போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது ஆறு போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

BB Tamil 8

   

இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கும் நிலையில் பிக்பாஸ் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஏற்கனவே எலிமினேட் ஆகிய வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி ரணகளம் செய்து வருகிறார் பிக்பாஸ். பிக் பாஸ் நாக் அவுட் சுற்று மூலம் எட்டு போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் இவர்களில் தீபக் மற்றும் அருள் இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். டிக்கெட் டூ பின்னாலே டாஸ்கேல் வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார் ரயான். தற்போது நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

   

 

இப்படியான நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இலங்கை தமிழை அழகாக பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இரண்டு படங்களில் அடுத்தடுத்து கமிட்டான லாஸ்லியா ஹர்பஜன்சிங் நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படம் மூலமாக தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு google குட்டப்பா திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது டாக்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். யூடியூப் பிரபலம் ஹரி பாஸ்கர் உடன் இணைந்து இந்த திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ள நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக பிக்பாஸ் சீசன் 8 வீட்டுக்கு லாஸ்லியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Boy Bestie Song Lyrics - Mr.Housekeeping