BREAKING: அண்ணாமலைக்கு எம்பி பதவி… எல். முருகன் கொடுத்த அந்த க்ளு… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் அந்த ஒரு முடிவு….!

By Nanthini on வைகாசி 1, 2026

Spread the love

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாநிலங்களவை (Rajya Sabha) எம்பி பதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன் சூசகமாகத் தெரிவித்துள்ள செய்தி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆந்திரப் பிரதேசத்தில் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை இடங்களில் ஒன்றை அண்ணாமலைக்கு ஒதுக்குவதன் மூலம், அவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது வெறும் எம்பி பதவி மட்டுமல்லாமல், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவுள்ள மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படுவதற்கான ஒரு முன்னோட்டமாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்திய அவருக்கு அங்கீகாரம் அளிப்பதன் மூலம், தென்னிந்தியாவில் பாஜகவின் செல்வாக்கை மேலும் உயர்த்த அக்கட்சியின் தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.