அமித் ஷா vs விஜய்… “தவெக தப்பியதே காங்கிரஸால் தான்!”… மாணிக்கம் தாகூர் எம்பி பரபரப்பு பேட்டி…!!

Spread the love

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மாநிலத் தலைவருமான மாணிக்கம் தாகூர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து சமீபத்தில் பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி மட்டும் துணையாக இருந்திருக்கவில்லை என்றால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா த.வெ.கவை இரண்டாக உடைத்து அக்கட்சியின் அரசியல் பயணத்தையே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பார் என்று கூறினார். அவ்வாறு கட்சியைப் பிளவுபடுத்தி, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கியிருப்பார்கள் என்றும், பாஜகவின் இத்தகைய அரசியல் வியூகங்கள் அனைவருக்கும் தெரிந்ததே என்றும் அவர் விமர்சித்தார்.

இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், தற்போது அக்கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் அவர்கள் எம்.பி.க்களைப் பெறும் பட்சத்தில், நிச்சயமாக அவர்களை இந்தியா கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுப்போம் என்று தெளிவுபடுத்தினார். தற்போதைய சூழலில், நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு கட்சியை கூட்டணியில் இணைக்க வலியுறுத்த முடியாது என்பதே தங்களின் நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக விஜய் ஏன் இதுவரை முன்மொழியவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தேர்தல் நேரத்திற்காகக் காத்திருக்குமாறு மாணிக்கம் தாகூர் பதிலளித்தார். விஜய் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு முதன்முதலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் தான் தொலைபேசியில் பேசி முதலமைச்சராக ஆதரவு கேட்டார் என்றும், த.வெ.கவுக்கு முதல் ஆதரவுக் கடிதத்தை வழங்கியது காங்கிரஸ் கட்சிதான் என்ற வரலாற்று உண்மையும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், விஜய் எப்போதும் குறைவாகப் பேசக்கூடியவர் என்பதால், தேர்தல் நெருங்கும் சரியான நேரத்தில் அவர் உரிய கருத்துகளைப் பேசுவார் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

Gayathri

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

2 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

2 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

2 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

2 மணத்தியாலங்கள் ago