“இவன் கூட இனிமே வாழ முடியாது”… 2 பிஞ்சு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை… குடிகார கணவனால் பறிபோன 3 உயிர்…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

ஆண்டிப்பட்டி அருகே தண்டியன்குளம் மலை கிராமத்தில் கணவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தை சேர்ந்த ஜெயப்பெருமாள் என்ற கூலி தொழிலாளி மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் வீட்டில் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று இரவும் வழக்கம் போல குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால் மணமுடைந்த ஜெயப்பெருமாளின் மனைவி தனலட்சுமி தன்னுடைய இரண்டு குழந்தைகளான தேவா (7), நீதி (2) இருவரையும் கைகளில் தூக்கிக்கொண்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கணவருடன் ஏற்பட்ட தகராறு மனைவி இரண்டு குழந்தைகளோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.