அஞ்சலி சிங் என்ற பெண் தனது கணவரைப் பிரிந்து, ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அலோகேஷ் (அல்கேஷ்) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழத் தொடங்கியுள்ளார். அஞ்சலிக்கு அவரது முதல் திருமணத்தின் மூலம் காவ்யா சிங் என்ற மூன்று வயது பெண் குழந்தை இருந்தது. ஆனால், அஞ்சலியின் கள்ளக்காதலன் அலோகேஷிற்கு அந்தக் குழந்தையைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், ஒருநாள் தனது மகள் தவறி சாக்கடையில் விழுந்து காணாமல் போய்விட்டதாக அஞ்சலி நாடகமாடினார். ஆனால், காவல்துறையினர் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதில், அஞ்சலி தனது பெற்ற மகளை ஒரு ஏரியில் மூழ்கடித்துக் கொலை செய்யும் அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியிருந்தன.
தனது கள்ளக்காதலனுடன் எந்தத் தடையும் இன்றி வாழ்வதற்காக, பெற்ற தாயே மூன்று வயதுக் குழந்தையைக் கொன்ற இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காம வலையில் சிக்கித் தாய்மைக்கே துரோகம் செய்த அஞ்சலியையும், அதற்குத் தூண்டுகோலாக இருந்த அவரது காதலனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய ஆட்சி…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை செய்யக்கோரி திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கை விசாரித்த…
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் அதிகாரம், இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 'ஒற்றைத்…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய், தனது அரசியல் பயணத்தில் ஆரோக்கியமான நாகரீகத்தைக் கடைப்பிடிக்கும் விதமாகப் பல்வேறு அரசியல் கட்சித்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. நீண்ட இழுபறிக்குப் பிறகு…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தொடர் ஆட்சி கனவைத் தகர்த்து, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108…