தாயே தன்னுடைய பிஞ்சு குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பிறந்த 43 நாட்கள் மட்டுமே ஆன பெண் குழந்தையை பெற்ற தாயே மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈச்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் பாரதி. இவருக்கு கடந்த மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்த காவல்துறையின் விசாரணையில் தான் உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது காவல்துறையினரின் விசாரணையில், இரட்டை குழந்தைகளில் ஒரு பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் தான் பெற்ற பிள்ளையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றதாகவும்” அவர் போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
