உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் மீட்டர்களால் (Smart Meters) மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாகக் கூறி, ஒரு கிராமமே திரண்டு வந்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது அங்கு வந்த ஒரு பெண், மின்கட்டண உயர்வால் தான் அடைந்துள்ள மன உளைச்சலை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார். அதிகப்படியான கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தனது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் ஆவேசமாகக் கத்தினார்.
“अरे मर जाएगी…हमने पैदा किया है..”इन्ने किया है क्या..? की इनका बच्चा है..”मेरा बच्चा है मार देंगे पटक के”..!
कानपुर में स्मार्ट मीटर से पूरा गांव परेशान है…बिजली घर पर लोग मीटर बदलने के लिए हंगामा कर रहे हैं..!
इस महिला को देखिए…..!👇👇
यह इतनी परेशान है कि अपना मानसिक… pic.twitter.com/OgAZRwYEyC
— Rahul Saini (@JtrahulSaini) April 7, 2026
அதிகாரிகளுடனான வாக்குவாதத்தின் போது, அந்தப் பெண் தனது குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு, “இது நான் பெற்ற குழந்தை, இதைத் தூக்கிப் போட்டு மிதித்துக் கொன்றுவிடுவேன்; இதில் உங்களுக்கு என்ன கவலை?” என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போலக் கதறினார். மின் கட்டணப் பிரச்சனை ஒரு சாமானியப் பெண்ணை எந்த அளவிற்கு மன உளைச்சலுக்குத் தள்ளியுள்ளது என்பதைக் காட்டும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
