நவரச நாயகன் கார்த்திக் நடித்த படம் உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன். இந்த படம் கடந்த 1992ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி என்ற பாடல் இப்போதும் டிரண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த படத்தில் நடித்தவர் மலையாள நடிகை மோனிஷா. இதுவே இவரது கடைசி படமாக மாறிவிட்டது. இந்த படத்தில் மோனிஷா இறந்து விடுவது போன்ற காட்சி இருந்த நிலையில், இந்த படத்தில் நடித்த பிறகு நடிகை மோனிஷாவும் ஒரு விபத்தில் மறைந்து விட்டார் என்பது மிகவும் சோகமானது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மோனிஷாவின் அம்மா ஸ்ரீதேவி கூறியதாவது, என்னுடைய மகள் மோனிஷா விபத்தில் இருந்த போது அவளுக்கு 21 வயது. அந்த விபத்தில் மோனிஷா இறந்து இப்போது 33 ஆண்டுகளாகி விட்டது. ஏகாதசியான அன்று சனிக்கிழமை காலை குருவாயூர் கோவிலுக்கு சென்று விட்டு காரில் திரும்பி வந்துக்கொண்டு இருந்தோம். கொச்சின் ஏர்போர்ட்டுக்கு அப்போது காரில் போய்க்கொண்டு இருந்தோம்.
திருவனந்தபுரம் – கொச்சி வழித்தடத்தில் ஆலப்புழா என்ற இடத்தில் எங்கள் கார் சென்ற போது, எதிரில் வேகமாக வந்த பஸ் எங்கள் கார் மோதி விட்டது. அப்போது என் மகள் என் மடியில் படுத்து தூங்கிக்கொண்டு வந்தாள். பஸ் மோதிய வேகத்தில் கார் அங்கிருந்த டிவைடரில் மோதி நான் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டேன். காருக்குள் இருந்த என் மகள் இந்த விபத்தில் உயிரிழந்து விட்டாள் என்று அவர் வேதனையாக அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…