சீனாவில் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவன் ஒருவன், நாள்தோறும் வழக்கமாக அளிக்கப்படும் வீட்டுப்பாடங்களை செய்து களைப்படைந்து கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளான். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தனது தாயாரிடம் கத்தி கூச்சலிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளான். “நாளைக்குக் கஷ்டப்பட்டு படித்து முடித்தால் இறுதியில் ஒரு பணக்காரனிடம் கூலி வேலை செய்யும் ஊழியராகத்தானே ஆகப்போகிறேன்? இதற்காகத் தினமும் ஏன் இந்த சித்திரவதையை அனுபவிக்க வேண்டும்?” எனத் தன் தாயாரை நோக்கி அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பியுள்ளான்.
அதற்கு அவனது தாயார், “நன்றாகப் படித்தால் தான் நல்ல வேலை கிடைக்கும்” என சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் தாயின் பேச்சை ஏற்காத அந்த சிறுவன், “நீ சொல்வதெல்லாம் கற்பனை உலகம், நிஜத்தில் அப்படி இல்லை” என அடித்துக் கூறி விவாதத்தை முடித்துள்ளான். 9 வயதிலேயே சமூகத்தின் வேலை கலாச்சாரத்தையும் கல்வி முறையையும் கேள்விக்குள்ளாக்கிய அச்சிறுவனின் பேச்சு, தற்பொழுது சர்வதேச சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…