“16 வருட திருமண வாழ்க்கை… 3 பிள்ளைகள்…” குடும்பத்தை உதறி தள்ளி காதலனுடன் ஓடிய தாய்… இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் வந்த வினை…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 12, 2026

Spread the love

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நாள்தோறும் கடுமையாக உழைத்து வந்த நிலையில், அவரது மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் செல்போன் மூலம் அடையாளம் தெரியாத நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவன் வேலைக்குச் செல்லும் நேரத்தைப் பயன்படுத்தி, அந்த நபருடன் அந்தப் பெண் நாள்தோறும் பேசி வந்துள்ளார். நாளடைவில் இந்தப் பேச்சு எல்லை மீறி கள்ளக்காதலாக மாறியது. இது எதுவுமே தெரியாமல் அந்த கணவன் தனது குடும்பத்திற்காகக் உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்தப் பெண் நள்ளிரவு 12 மணியளவில் தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

   

35 முதல் 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், பெற்ற 3 குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த கணவனின் அன்பைப் பற்றியோ சிறிதும் சிந்திக்காமல், நள்ளிரவில் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயின் இந்த கொடூர துரோகத்தால் 3 பிஞ்சுக் குழந்தைகளும் அனாதையாக தவிக்கும் அவலம் நேர்ந்துள்ளது.