“நாத்தனாரால் கண்ணீர் சிந்திய மருமகள்…” மகளை பார்த்து தாய் கேட்ட ஒரு ஒரு கேள்வி… நெட்டிசன்களின் இதயத்தை வென்ற நெகிழ்ச்சி பதிவு…!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் குடும்பக் கதைகள் மற்றும் உணர்வுபூர்வமான விழிப்புணர்வுப் பதிவுகள் தொடர்ச்சியாக வைரலாகி வரும் நிலையில், தற்போது தாய் மற்றும் மகளுக்கு இடையேயான உறவையும், குடும்ப அமைதியையும் மையமாகக் கொண்ட ஒரு பதிவு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த ஒரு மாதமாகத் தன் தாய் வீட்டில் தங்கியிருக்கும் அஞ்சலி என்ற பெண், தனது அண்ணியார் ரியாவிடம் தொடர்ந்து சிறு சிறு விஷயங்களுக்கும் குறைகளைச் சொல்லி வருவதும், இதனால் குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளும் இந்தச் கதையில் விவரிக்கப்பட்டுள்ளன. ரியா மிகவும் பக்குவமாக நடந்து கொண்டாலும், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கண்ணீருடன் தனது அறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொள்கிறார்.

   

இதனைக் கவனித்த தாயார், அஞ்சலியின் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்று, “உன் புகுந்த வீட்டிற்கு உனது நாத்தனார் வந்து இதுபோலத் தொந்தரவு செய்தால் உனக்கு எப்படி இருக்கும்?” என்று கேட்ட சாட்டையடி போன்ற கேள்வி அஞ்சலியை உலுக்கியெடுப்பதாக இந்த நெகிழ்ச்சியான பதிவு முடிகிறது. குடும்ப உறவுகளின் மதிப்பை உணர்த்திய தாயின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.