“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2026

Spread the love

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

பெங்களூர் ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் மீனா நாராயண் (44). இவர் அழகு நிலையம் நடத்தி வரும் நிலையில், இவரது ஓட்டுநராகப் பணியாற்றிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராகேஷ் பரசுராம் ஜமுனி (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தைத் தாண்டிய கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் உறவுக்கு மீனாவின் மகன் விஜய் நாராயண் (24) தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

   

தங்களது உறவுக்கு மகனே மிகப்பெரிய தடையாக இருப்பதாகக் கருதிய மீனாவும் ராகேஷும், விஜய்யைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். கடந்த நவம்பர் 1-ஆம் தேதி கர்நாடக ராஜ்யோத்சவா கொண்டாட்டங்களைக் காட்டுவதாகக் கூறி விஜய்யைப் பெலகாவிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து விஜய்யின் குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளனர்.

   

அவர் மயங்கியதும் காருக்குள்ளேயே துணியால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, உடலைச் சாலையோர வடிகாலில் வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். பின்னர் தாமே காவல் நிலையத்திற்குச் சென்று நாடகமாடிய தாயின் மீது சந்தேகம் அடைந்த போலீசார், செல்போன் கால் டேட்டா அடிப்படையில் நடத்திய தீவிர விசாரணையில் இக்கொடூரச் சதி அம்பலமானது. இதனையடுத்து தாய் மீனா, காதலன் ராகேஷ் மற்றும் உடந்தையாக இருந்த 4 பேர் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.