ஷாக்கிங்க் வீடியோ: எக்ஸ்கலேட்டரில் குழந்தையை தனியாக விட்டுவிட்டு…. கண்டுகொள்ளாமல் சென்ற தாய்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் எஸ்கலேட்டரில் சவாரி செய்கிறார். அப்போது  தனது குழந்தையை சரியாகப் பிடிக்காமல்  தனது சாமான்களில் அதிக கவனம் செலுத்துவது போல் தெரிகிறது. தனது குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்குப் பதிலாக, அவள் தனது சூட்கேஸுக்கு முன்னுரிமை அளித்து, எஸ்கலேட்டரில் தனது பொருட்களை இழுத்து செல்கிறார். ஆனால் குழந்தையை கவனிக்கவில்லை.

ஆனால் குழந்தை ஏற முயற்சிக்கும்போது தட்டு தடுமாறி விழப்போகிறது. அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் குழந்தையை அலேக்காக தூக்கி காப்பாற்றியுள்ளார். இது ஒரு “தவறு” அல்ல. இது பொறுப்பற்ற பெற்றோர் தங்களின் வசதிக்காக ஒரு குழந்தையின் உயிரைப் பணயம் வைப்பது. ஒரு குழந்தையின் பாதுகாப்பு உங்கள் முதல் முன்னுரிமை இல்லையென்றால், உங்களை ஒரு பெற்றோர் என்று அழைக்க நீங்கள் தகுதியற்றவர் என பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.