அடச்சீ… நீயெல்லாம் என்ன மனுஷி?… மனநலப் பாதிப்பால் பெற்ற 9 வயது மகளைக் கொன்ற தாய்… சூரியபேடில் நடந்த கொடூரம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 20, 2026

Spread the love

சூரியபேட் மாவட்டம் கொடடாவில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. சாய் ரபானி என்ற பெண்ணின் 9 வயது மகள் ஜாஸ்மின், தாயின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கணவரைப் பிரிந்து உறவினர் வீட்டில் வசித்து வந்த சாய் ரபானி, மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விளையாடிக்கொண்டிருந்த சிறுமையை கல்லைக் கொண்டு தாய் தாக்கியதில் படுகாயமடைந்த ஜாஸ்மின், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உறவினர்களின் வீட்டின் அருகில் நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

   

இச்சம்பவம் குறித்து சிறுமியின் மாமா அளித்த புகாரின் பேரில் கொடடா நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.