உத்திரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் பெண் ஒருவர் தன்னுடைய காதலனோடு ஹோட்டலில் இருந்த நிலையில் தன்னுடைய மாமியாரால் பிடிபட்டுள்ளார். இதனால் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஹோட்டலின் மேலிருந்து குதித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் அந்த பெண்ணின் கணவர் தன்னுடைய மனைவியின் துரோகம் குறித்தும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது அந்தப் பெண்ணிற்கு கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. அவருக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ससुरालियों ने विवाहित महिला को होटल में प्रेमी के साथ पकड़ा
होटल की पिछली खिड़की से कूदकर महिला हुई मौके से फरार
होटल की दीवार से कूदते हुए ससुरालियों ने बनाया वीडियो
मौके पर पुलिस बुलाकर ससुरालियों ने की मामले की शिकायत
पति ने पत्नी से जान का खतरा होने की कही बात… pic.twitter.com/dP76rmovgr
— News1India (@News1IndiaTweet) June 17, 2025
இதன் காரணமாக காவல்துறையினர் இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். விசாரணைக்கு பின் காவல்நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகு அந்தப் பெண் தன்னுடைய காதலனை சந்திக்க நேராக ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இது குறித்து அறிந்த அந்த பெண்ணின் கணவரும், மாமியாரும் அங்கு சென்றுள்ளார்கள். இவர்கள் வந்தது தெரிய வந்ததும் அந்த பெண் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனையடுத்து காவல்நிலையத்தில் புகாரளித இந்த பெண்ணின் கணவர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த பெண்ணின் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள் மேலும் அந்த நபர் தன்னுடைய மனைவி மீது பலருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
