திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காணாமல் போன பெண் ஒருவர் தைல மரக்காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி அங்காயி (56). கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவரது கைப்பேசி திடீரென அணைக்கப்பட்டதால், கோவையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இவரது மகன் கமலதாசன் (35) ஊருக்கு வந்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆளிப்பட்டியில் உள்ள தைல மரக்காட்டில் அங்காயி உயிரிழந்து அழுகிய நிலையில் கிடப்பது கண்டறியப்பட்டது. உதவி ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான போலீசார் உட கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
