கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவிற்குட்பட்ட கொப்பா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று அதிகாலை 5:30 மணி முதல் 6 மணிக்குள் ஒரு பயங்கரச் சாலை விபத்து நிகழ்ந்தது. பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுராவைச் சேர்ந்த முத்து, அவரது மனைவி காவ்யா மற்றும் மகள்கள் கீர்த்தனா (9), 12 வயது மூத்த மகள் ஆகிய நால்வரும் கௌரி-கணபதி பண்டிகையைக் கொண்டாடிவிட்டுத் தாய் வீட்டிலிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த பால் டேங்கர் லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்தக் கோர மோதலில் முத்து மற்றும் 9 வயது சிறுமி கீர்த்தனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த தாய் காவ்யா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக 12 வயது மூத்த சிறுமி மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினாள். ஒரே நொடியில் தாய், தந்தை மற்றும் தங்கையை இழந்து நிற்கும் சிறுமியின் நிலை கண்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து கொப்பா போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…