“4 மாத இரட்டைக் குழந்தைகளை நீரில் மூழ்கடித்துக் கொன்ற தாய்…” பிரசவத்திற்குப் பிந்தைய மனநோய்… பெங்களூருவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு தலகட்டப்புரா பகுதியைச் சேர்ந்த 40 வயதான உமாதேவி என்ற பெண், தனது 4 மாத இரட்டைக் பெண் குழந்தைகளை நீரில் மூழ்கடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் கடுமையான மனநலக் கோளாறான ‘போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்’ எனும் பாதிப்பினால் உமாதேவி கடந்த சில மாதங்களாகக் கடும் மன உளைச்சலுக்கும் போராட்டத்திற்கும் ஆளாகி வந்துள்ளார். குழந்தை பிறந்தது முதலே அவரிடம் ஏற்பட்ட தீவிர மாற்றங்களைக் குடும்பத்தினர் கவனித்து அவருக்குச் சிகிச்சையளிக்க முயன்றும் இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது.

   

குழந்தைகளைக் கொன்றதைத் தொடர்ந்து, உமாதேவி மீண்டும் பெங்களூருவில் உள்ள பிரபல நிம்ஹான்ஸ் மனநல மருத்துவமனையில் தீவிரப் பாதுகாப்பு மற்றும் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரசவத்திற்குப் பிந்தைய பெண்களின் மனநலப் பராமரிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள இச்சம்பவம் குறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.