ஐயோ… குடும்ப தகராறில் ஏற்பட்ட சோகம்… இரு மகள்களுடன் தாய் ஏரியில் குதித்து தற்கொலை… தெலுங்கானாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 8, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கானாபுரம் மண்டல் பக்கல் ஏரியில், தனது இரண்டு சிறு வயது மகள்களுடன் தாய் குதித்து தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் கீசுகொண்டா மண்டலம் எல்குர்த்தி ஹவேலி கிராமத்தைச் சேர்ந்த மமதா (30) மற்றும் அவரது மகள்கள் ஹரிணி, ஜுன்னு என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மமதா கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த சுமன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கடந்த சில காலமாக சுமனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கிராமப் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தியும் சுமனது நடத்தையில் மாற்றம் ஏற்படாததாலும், கணவர் குடும்பத்தினர் மமதாவைத் திட்டியதாலும் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

   

https://twitter.com/pulsenewsbreak/status/2119025768999391387/video/1

   

இதனால் கடும் மனவேதனை அடைந்த மமதா, தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு பக்கல் ஏரிக்குச் சென்று, படகு சவாரி செய்வதற்கான டிக்கெட்டை எடுத்துக் கொண்டு ஏரிக்குள் குதித்து தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு மண்டல டிசிபி அங்கித் குமார் மற்றும் போலீசார் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நர்சம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.