கேரள மாநிலம் மலப்புரம் எடப்பால் அருகே உள்ள கண்டணகம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா குமாரி (57) . இவருடைய மகள் அஞ்சனா (27 ). அனிதா குமாரிக்கு ஒரு மகனும் உள்ளார் . கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் அனுதா குமாரியின் கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு அவர் தன்னுடைய மகளை கவனித்து வந்துள்ளார். இதற்கிடையில் அஞ்சனா முதுகு தண்டுவட நோய் பாதிப்பு காரணமாக படுத்தப் படுக்கையையாக இருந்தார். இந்த நிலையில் நேற்று அனிதா குமாரியின் மகன் வழக்கம் போல வேலைக்கு சென்றார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த அனிதா குமாரி தன்னுடைய மகளின் நிலை நினைத்து மனமுடைந்து காணப்பட்டுள்ளார். பின்னர் மகளை கொலை செய்து முடிவு செய்த அவர் அஞ்சனாவை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்க வைத்து கொலை செய்துள்ளார். பிறகு அவரும் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தாய் மற்றும் மகள் ஆகிய இரண்டு பேரின் சடலங்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். விசாரணையில் நோய் பாதிப்பால் தன்னுடைய மகளின் நிலையை கண்டு மனமுடைந்த தாய் மகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…