“அவள் என் பாதைக்கு தடையாக இருந்தாள்!”.. ரகசிய காதலனுக்காக பெற்ற மகளுக்கு தாய் செய்த கொடூரம்.. போலீசாரையே அலற வைத்த தாயின் வாக்குமூலம்..!!

Spread the love

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் குணசேகரன் என்பவர் வசித்து வந்தனர். இவரின் மனைவி நிஷாந்தி. இந்த தம்பதிக்கு 9 வயதில் கீர்த்திஷா என்ற பெண் குழந்தை இருந்தது. சமீபக்காலமாக தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரைப் பிரிந்த நிஷாந்தி காரை கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மகளுடன் சென்று வசித்து வந்தார். கடந்த 13ஆம் தேதி பிற்பகலில் தூங்கச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் எழவில்லை எனக் கூறி, தாய் நிஷாந்தி அவளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். எனினும், சிறுமியின் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததைக் கண்டறிந்து, அவர்கள் உடனடியாக பாடாலூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சிறுமி மயங்கிக் கிடந்ததாகக் கூறி முதலில் நாடகமாடிய நிஷாந்தியிடம், உடற்கூராய்வு அறிக்கையில் சிறுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த 29 வயதான நிஷாந்திக்கு, அவரது வீட்டருகே வசிக்கும் மணிகண்டன் என்ற இளைஞருடன் திருமணத்தைத் தாண்டிய ரகசிய உறவு ஏற்பட்டுள்ளது. மணிகண்டனைத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு நிஷாந்தி வற்புறுத்தியபோது, 9 வயதில் குழந்தை இருப்பதால் தனது வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக மணிகண்டன் கூறியுள்ளார்.

இதையடுத்து, ரகசிய காதலனுடன் நடக்கும் இரண்டாவது திருமணத்திற்குத் தடையாக இருந்த தனது பெற்ற மகளையே கொலை செய்ய நிஷாந்தி சதித்திட்டம் தீட்டினார். சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த சிறுமி கீர்த்திஷாவைத் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, எதுவுமே தெரியாதது போல் நீலிக்கண்ணீர் வடித்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். பெற்ற மகளையே கொடூரமாகக் கொன்ற தாய் நிஷாந்தி மற்றும் அதற்குத் தூண்டுகோலாக இருந்த அவரது காதலன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

கருணாநிதி குடும்பத்தால் இனிமேல் முடியாது…! “அவரை உதயநிதி என்று சொல்லாதீர்கள்…” ‘ஆபாசநிதி’ என பெயரிட்டு சாடிய ஆதவ் அர்ஜுனா…!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

5 minutes ago

அடச்சீ… கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கி… 2 குழந்தைகள் கடத்தல்… கணவன் வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

ஜனகாம மாவட்டம் ஓபுலகேசவாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்தர் ரெட்டி மற்றும் மாதவி தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு…

6 minutes ago

அட கொடுமையே… உயிரைக் காப்பாற்றிய மக்களிடம்… என்னைக் கேட்க நீங்கள் யார்?… மனதை உலுக்கிய பெண்ணின் அதிர்ச்சிப் பேச்சு…!

வாழ்க்கையில் ஏற்பட்ட தீவிர பிரச்சனைகளால் மனமுடைந்துபோன ஒரு பெண், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானாள். விரக்தியின் எல்லைக்கே சென்ற அவளுக்கு…

24 minutes ago

பகீர்… காதல் திருமணம் செய்த 24 வயது மகளை… அடித்துக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்… உ . பி.- யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்ட 24 வயது மகள் அங்கிதாவை, அவரது…

30 minutes ago

அய்யோ போச்சா… முதல் சந்திப்பில் ரூ 20,500 காலி… டேட்டிங் ஆப் காதலியின் அடுத்த மீட்டிங்கிற்கு பிளான்… தப்பிப்பாரா இளைஞர்?…

முதல் சந்திப்பிலேயே ரூ 20,500 கட்டணம் என்பது மிகவும் அதிகம், மேலும் இது சமீபத்தில் டேட்டிங் செயலிகளில் பலருக்கும் நடக்கும்…

54 minutes ago