பெற்ற தாயா…? கொடூர அரக்கியா..? ரூ.5 மிட்டாய்க்காக 6 வயது சிறுவனின் உள்ளங்காலில் சூடு போட்ட தாய்… கண்டுக்காமல் பிறந்தநாளில் விழாவுக்கு சென்ற கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 10, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் பகுதியில், ரூ.5 மதிப்பிலான மிட்டாயை சாப்பிட்டதற்காக தனது 6 வயது பெற்ற மகனை தாய் ஒருவரே கொடூரமாக சித்திரவதை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆத்திரமடைந்த அத்தாய், சமையல் எரிவாயு அடுப்பில் கத்தியைப் பழுக்க காய்ச்சி சிறுவனின் உள்ளங்கால்களில் சூடு வைத்துள்ளார். இதில் பச்சிளம் சிறுவன் அலறித் துடித்துக் படுகாயமடைந்த நிலையில், இதனைத் தடுக்க வந்த பாட்டியையும் வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின்னர், காயங்களுடன் கதறிய சிறுவனை ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, அத்தாய் அசால்ட்டாகப் பிறந்தநாள் விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றுள்ளார். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை, தனது மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து முறையிட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பெற்ற தாயே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.