தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வரும் மமதா என்பவருக்கும் சித்தி பேட்டை மாவட்டம் ராய்ப்போல் மாவட்டம் வட்டே பள்ளியை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் திருமணம் ஆகி சரண் (3) என்ற மகனும் இரண்டு வயதில் தனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமியாருடன் மமதாவுக்கு தகராறு ஏற்பட்ட நிலையில் கோபித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு பத்து நாட்கள் மட்டுமே இருந்த மமதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பயாஸ் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பயாஸ் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கள்ளக்காதல் ஜோடி இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் மமதா வீட்டை விட்டு சென்றுவிட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் இது தொடர்பாக மமதாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். பிறகு போலீசார் தேடிவந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் காதல் ஜோடியை பிடித்தனர். ஆனால் குழந்தையை காணவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது உல்லாசம் அனுபவிக்க தடையாக இருந்ததால் கள்ளக்காதனுடன் சேர்ந்து பெற்ற தாயே குழந்தையை கொடூரமாக அடித்துக் கொன்றுவிட்டார். பிணத்தை சாக்கு முட்டையில் கட்டி எடுத்து வந்து யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
