ஐயோ நெஞ்சே பதறுது…. ChatGPT-யில் தேடிய அந்த விஷயம்…. தாயையும் தம்பியையும் கொன்ற 17 வயது சிறுவன்…. வெளிவந்த பகீர் தகவல்கள்…!

By Nanthini on ஆவணி 13, 2026

Spread the love

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் ஆக்டன் பகுதியில் வசித்து வந்த 45 வயதான சுதா வெங்கடேசன் மற்றும் அவரது 14 வயது மகன் சித்தார்த் அரவிந்த் ஆகிய இருவர் வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர். இந்த ரத்த உறைவிக்கும் சம்பவம் தொடர்பாக சுதாவின் மூத்த மகனான 17 வயது சிறுவன் அர்ஜுன் அரவிந்த் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. வகுக்கப்பட்ட நேரத்திற்கு வீட்டிற்கு வந்த விசேஷ ஆசிரியர் ஒருவரால் கதவு திறக்க முடியாத நிலையில், இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அன்னை மற்றும் தம்பியின் உடல்கள் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவத்திற்குப் பின் தாயின் காரை எடுத்துக்கொண்டு தப்பியோடிய அர்ஜுனை, வேய்லேண்ட் பகுதியில் வைத்து அம்மாநில காவல்துறை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்தது.

https://twitter.com/i/status/2087612663555870721

   

தற்போது அர்ஜுன் அரவிந்த் மீது இரு நபர் கொலை வழக்கு, தாக்குதல் மற்றும் வாகனம் திருட்டு உள்ளிட்ட தீவிர குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விசாரணையின் போது, அந்த சிறுவன் செயற்கை நுண்ணறிவுச் செயலியான ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) மூலம் தனது குடும்பத்தைக் கொல்வது தொடர்பான கதைகள் மற்றும் கற்பனை எண்ணங்கள் குறித்து இணையத்தில் தேடியுள்ளதாக மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தேடல்களுக்கும் கொலை சம்பவத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை வழக்கை வழக்கமான சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்பதால், அவர் கான்கார்ட் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.