எடப்பாடி கோட்டையை பிடித்த விஜய்…. இரவோடு இரவாக தவெகவில் கூண்டோடு ஐக்கியம்… காலையிலேயே பரபரப்பு…!

By Nanthini on பங்குனி 2, 2026

Spread the love

சேலம் மேற்கு ஒன்றியம், கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கிளைப் பலப்படுத்தும் நிகழ்வு உற்சாகமாக நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, அக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களை வரவேற்ற நிர்வாகிகள், அவர்களுடன் கட்சியின் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்வரும் தேர்தல் பிரச்சார யுக்திகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். பெண்களின் இந்தத் திடீர் வருகையும் ஆர்வமும் உள்ளூர் நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நிர்வாகிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கோட்டகவுண்டம்பட்டி பகுதிகளில் வீடு வீடாகச் சென்ற தவெகவினர், கட்சியின் கொள்கை விளக்கத் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மக்களிடம் உரையாடினர். “மாற்றத்தை நோக்கிய பயணம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், பெண்களின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது. அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த முன்னெடுப்பு, அந்தப் பகுதியில் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.